காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சாலையோரம் நடந்து சென்றிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மேல்மருவத்தூருக்கு நடைபயணமாக சென்றுள்ளனர். இரவு 2.10 மணிக்கு மேல்மருவத்தூர் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் ஒரு சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.