புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

எங்கள் கோரிக்கைக்கு அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களும் ஆதரவுதான்! சிஐடியு மாவட்ட செயலாளர் பேட்டி!

ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதனை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை.

இந்தப் போராட்டம் குறித்து, சிஐடியு விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி கூறியதாவது, 

விழுப்புரம் மாவட்டதில் 700 பேருந்துகள் உள்ளன. இதில் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்ங்க மாநில பொதுச்செயலாளர் சின்னசாமி, 92 ஆயிரம் ஊழியர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களை வைத்து பேருந்துகளை இயக்குவோம் என்றார். 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை என்பதை பார்த்தால் அவர் கூறியது பொய். 

அண்ணா தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் டிப்போவுக்கு வந்து கையெழுத்து போடுவதோடு சரி. வேலைக்கு செல்வதில்லை. இது காலம்காலமாக நடந்து வருகிறது. அந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் வேலைக்கு செல்கின்றனர். ஆகையால் அந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு எங்களின் கோரிக்கை நியாயமானது. தங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறார்கள் என்பது தெரியும். அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பலர் தற்போது அதிமுக ஆட்சி வந்த பிறகு, மிரட்டி சேர்க்கப்பட்டவர்கள்தான்.

ஆகையால்தான் அவர்கள் தங்கள் தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்களை, முதலில் நீங்கள் பேருந்தை ஒட்டுங்கள் என்று கூறியதும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்தை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் இயக்கியுள்ளனர். அவர்கள் பத்திரிக்கைகள், ஊடகங்களுக்கு தெரிவது போல் உட்கிராமங்களுக்கு செல்லாமல், நகர்புறங்களில் மெயின் ரோட்டில் ஓட்டுகின்றனர். பேருந்து நிலையத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர். 

முறையான பயிற்சி இல்லாமல் வெளியாட்களை வைத்து பேருந்தை இயக்கினால், பொதுமக்களின் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு. இதனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷப் பரிச்சையில் இறங்காமல் எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்றி, பொதுமக்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்க நடவடிக்கை எடுகக வேண்டும். வெளி ஆட்களை வைத்து பேருந்துகளை இயக்குவார்கள் என்பதற்காக டிப்போவில் மறியல் செய்து கைதாக தயாராக உள்ளோம் என்றார்.

ad

ad