புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 டிச., 2014

ஜனாதிபதி / தேர்தல் களம்

essayஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஷ்யங் களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது.
தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
 
 
தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள் பங்குக்கு மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிப்பும் பரப்புரைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.
 
 
கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பல்கலைக்கழக மாண வர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். உண்மையில் இது அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் பல்கலை மாணவர்களி டையே பரப்புரையை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  
 
 
 
தேர்தல் காலங்களில்  அலரி மாளிகை அன்னசாலை ஆவதும், ஆளும் கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமை யற்காரர்கள் ஆவதும் வழக்கமானது தான் என்று எதிரணியினர் நாடாளு மன்றத்துக்குள்ளேயே நையாண்டி செய்திருக்கின்றனர்.அந்தளவுக்கு மஹிந்தவின் வெற்றிக்காகவும், தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற் காகவும் அரசில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் வாலாட்டி தமது விசுவாசத்தை வெளிப்படுத்துவார்கள். (ஆனால் இந்த முறை அதிக விசுவாசம் காட்டினாலும், "எங்கே இவனும் கட்சி தாவப்போகின்றானோ?" என ஆளுங்கட்சிக்குள்ளேயே தமது உறுப்பினர்களைப் பற்றி சந்தேகம் வந்துவிடுகிறதாம்)
ஒவ்வொரு அரசாங்கமும் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார் நடவடிக்கை களை முன்னெடுப்பது வழக்கமானது. தேர்தல் விதிகளுக்கு அது முரணான போதும் அவ்வாறான நடவடிக்கைகளை ஆளும் தரப்பினர் என்றைக்கும் கைவிட்டதில்லை. இலங்கையிலும் எந்த அர சாங்கம் ஆட்சியிலிருந்தாலும் இதையே செய்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சி இந்த முறை ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்படவே செய்கின்றது.
 
 
தேர்தல் காலங்களில், அரச ஊழியர்களின் வாக்குக்களை வளைப்பதற்காக வேதன உயர்வுகள், பதவியுயர்வுகள் வழங்கப்படுவதும் வழமை. இந்தப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக யாழ்.குடாநாட்டிலும் ஒவ்வொரு வாரமும் தொழிற்சங்க ஒன்று கூடல், இளைஞர் அணி மாநாடு போன்ற பல்வேறு பெயர்களில் அரசின் தேர்தல் பரப்புரை அரங்கேறத் தொடங்கிவிட்டது. இந்தவகையில் இணைந்த தொழிற் சங்க கூட்டமைப்பின் யாழ். மாவட்ட ஒன்றுகூடல் என அரச ஊழியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அழைக்கப்பட்டனர்.
 
 
வாழ்க்கை படிக் கொடுப்பனவு ரூபா 10000 வரை அதிகரிப்பு,  அடிப்படைச் சம்பளத்தை மூபா 15000 ஆக அதிகரித்தல், தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் அழைக் கப்பட்டனர். (ஆனால் இவையயல்லாம் நிறைவேற்றப்படவுள்ளதாக 2015க்கான பட்ஜெட்டில் அரசாங்கம் தெரிவித்த பின்னர் எதற்கு மீண்டும் அதே கோரிக்கை என்பதுதான் எவருக்கும் புரியாத புதிர்) போக்குவரத்து துறை, சுகாதார துறை சிற்றூ ழியர்கள், பெற்றோலியத் துறை போன்ற பல துறை களைச் சேர்ந்த அரச ஊழியர் கள்  அழைக்கப்பட்டிருந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தும் பல அரச ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு (தமது பிரச்சினை களுக்கு தீர்வு ஏற்படும் என்ற நோக்கில்)சென்றனர்.ஆனால் அங்கே நடந்ததோ வேறு. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் மற்றும் அவரது பரிவாரங்கள் ஜனாதிபதியின் புகழ் பாடவே அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. " இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்­வை வெற்றிபெற செய்யுங்கள். உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்"என்றும் தொடர்ச்சியாகச் சொல்லி அரச ஊழியர்களின் "மண்டையைக் கழுவும்" முயற்சியே நடந்தது.
 
 
 நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ இருந்த இலங்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளதாக தெரிவித்தார். "வடமாகாண மக்கள் வாக்களிக்காவிட்டா லும் ஜனாதிபதி மஹிந்த ராஜப க்­ வெல்வார். அவருக்கு தென்பகுதி மக்களின் வாக்குகளே போதும். ஆனால், ஒருவர் எமக்கு நல்ல விடயங்களைச் செய்யும் போது அவர்களை தட்டிக்கொடுப்பதோடு நன்றியும் தெரிவிக்கவும் வேண்டும்" என்று மறைமுகமாக மஹிந்தவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருந்தார்.
 
 
இதைக் கேட்ட அருகிலிருந்த ஊழியர் ஒருவர்  "ஒமோம். எங்கையோ இருந்த மஹிந்த எங்கையோ கொண்டுபோட்டார் தான். அதான் இப்ப ஒரு கிலோ சீனி நூறு ரூபாக்கு வேண்டிறம். இதுதான் அவற்ற அபிவிருத்தி" என அங்கலாய்த் தார்.விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை தொழிற்சங்கங்களின் கூட்டம் என அழைக்கப்பட்டு அலைக்கழிக் கப்பட்டமைக்கும் அரச ஊழியர்கள் தமது விசனத்தைத் வெளியிட்டனர்.
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டத் திலுள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகள் அழைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள் வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட் டன. கூட்டத்துக்கு வருகை தந்த அனைத்து இளைஞர் யுவதிகளும் 15 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு, குழு விலுள்ள அனைவரும் வீடு வீடாகச் சென்று மஹிந்தவின் அபிவிருத்தி பற்றி விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தினை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
 
 
ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களை யும் சந்தித்து அவர்களுடன்  உரையாடி, ஜனாதிபதி இதுவரை மேற்கொண்ட அபிவிருத்திகள் தொடர்பாக எடுத்து ரைத்து இந்த முறை ஜனாதிபதி தேர்த லில் மஹிந்தவின் வெற்றியை உறுதி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட் டது.வேலை கிடைக்கப்போகிறது என மகிழ்ச்சியாகக் கூட்டத்துக்குச் சென்ற அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தவே அங்கு அழைக்கப்பட்டமை தெரிய வந்ததால், அதிருப்திக்குள்ளாகினர்.
 
 
இனப்பிரச்சினை,போர் வெற்றி, பட்டதாரிகள் பிரச்சினை ஆகியவற்றைக் கொண்டு இது வரை அரசியல் நடத்திய மஹிந்த அரசு இப்போது அதை வேறு பக்கமாக திருப்ப முனைகின்றது. குறிப் பாகத் தங்களைக் கொடுமையான போர் மூலம் ஒடுக்கியவர் மஹிந்த என்ற படிமம் தமிழர்களிடையே ஆழமாகப் படிந்துள்ளது. எனவே அந்தப் படிமத்தை மாற்றியமைத்து மஹிந்தவே தமிழர் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற் கொண்ட தலைவர் என்ற விம்பத்தை உருவாக்க அரச தரப்பினர் முனைகின் றனர். அதனாலேயே இப்படி 15 பேர் கொண்ட இளைஞர் குழுவை சுதந்திரக் கட்சியினர் பயன்படுத்தப்போகின்றனர்.
 
 
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின் எந்தவித நியமனங்களோ, சலுகைகளோ வழங்கப்படக் கூடாது என்பது  தேர்தல் விதி. ஆனால் சுதந்திரக் கட்சியோ தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப்  பயன்படுத்தி நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கூறி சிற்றூழியர்களை அழைத்து இத்தகைய பரப்புரைகளை மறைமுகமாகத் திணித்து மக்கள் மத்தியில் தமது கட்சியின் இருப்பை உறுதிப்படுத்த முயல்கிறது.
தேர்தல் என்றவுடன் பல்வேறு செயற்றிட்டங்களை ஒவ்வொரு அரசும் மேற்கொள்ளும். விலைகுறைப்பு, ஜனநாயகத்தை  உறுதிப்படுத்தப்படு வது போன்ற தோற்றப்பாடு, பொதுமக்களுக்கு மாடுகள், மரக்கன்றுகள் போன்ற இலவசங்களை வழங்குதல் போன்ற பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பது வழமை. அந்த வகையில் இந்தமுறையும் dகடந்த இரண்டு மாதங்களில் இரு தடவைகள் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் இவை என்ன நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுகின்றன என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். இனிப் போர் வெற்றியைக் காட்டி வாக்குகளை அள்ளும் வேலை எடுபடாது எனத் தெரிந்துகொண்டதாலேயே அரசு மக்களின் வாக்குகளை வளைக்க இத்தகைய மாற்று வழிமுறைகளைக் கையாளுகிறது.
 
 
தேர்தல்கள் நெருங்கும்போது வாக் காளர்களைத் தெய்வமாக மதிப்பதும் தேர்தல் முடிந்ததும் அவர்களைத் துச் சமாக நினைப்பதும் எல்லா அரசியல் வாதிகளுக்கும் கைவந்த கலைதான். அந்த யுக்தியில் கைதேர்ந்தவரான மஹிந்த, தனது அரச இயந்திரத் துணை யுடன் நடத்தும் பகடையாட்டத்தில் வெல்வாரா? இல்லையா? என்பதை அடுத்த மாதம் தெரிந்து கொண்டுவிடலாம்.
 


பகடைக்காய்கள்