புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: ஜி.ரா. அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிந்து 16 மாதங்கள் முடிந்தபிறகும்,  புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்த அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் அஇஅதிமுக அரசு முன்வராத நிலையில் வேறுவழியின்றி தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக ஆளுங்கட்சியினரையும், சமூகவிரோதிகளையும், காவல்துறையினரையும் பயன்படுத்தி தொழிலாளர்களை அச்சுறுத்தி வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்து போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி தொழிலாளர்களை பழிவாங்கும் அராஜக நடவடிக்கைகளை அஇஅதிமுக அரசும், போக்குவரத்து நிர்வாகமும் எடுத்துவருகின்றன. இத்தகைய தொழிலாளர் விரோத ஒடுக்குமுறை நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அனுபவமில்லாத பயிற்சி பெறும் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகத்திற்கு சம்பந்தமில்லாத ஓட்டுநர்கள் ஆகியோரை பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிடவும் போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது சட்ட நடைமுறை விதிகளுக்கு எதிரானதாகும். பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். இதுபோன்ற தவறான நடைமுறைகளை கைவிட்டு, காலம் கடத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தொழிற்சங்க தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது சுமூகத் தீர்வை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாளைய (31.12.2014) தினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad