புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

பெங்களுருவில் குண்டு வெடிப்பு: படுகாயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள சர்ச் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பெண் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பில் படு்காயமைடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண் பவானி என்றும், அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.  இந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த மற்றொரு நபர் பெங்களுருவைச் சேர்ந்த கார்த்திக். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீசார் குண்டு வெடிப்பி்ற்கான காரணம் தெரியவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்ததாக போலீ்ஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு, உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ad

ad