புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

ஜமாத் கட்சி தலைவருக்கு மரண தண்டனை


வங்காள தேசத்தில் ஜமாத் கட்சி தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வங்காள தேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் ஏ.டி.எம். அசாருல் இஸ்லாம் (வயது 62). 1971-ம் ஆண்டு, அந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, கொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்புகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்ததாக அசாருல் இஸ்லாம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 இது தொடர்பாக அவர் மீது போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை டாக்காவில் உள்ள சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது.

விசாரணை முடிவில், அசாருல் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதிய நீதிபதி இனாவத்தூர் ரகீம் தலைமையிலான அமர்வு, அவருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 158 பக்கங்களை கொண்ட தீர்ப்பில், ராங்பூரில் 1,200 க்கும் மேலான மக்களை படுகொலை செய்த அசாருல் இஸ்லாமை மரணம் அடையும் வரையில் தூக்கில் போடும்படி கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் போர்க்குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 16-வது நபர் என்ற பெயரை அசாருல் இஸ்லாம் பெறுகிறார்.

ad

ad