புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2014

சட்டமன்றத்தில்தான் பேசமுடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசினாலும் தாக்குவதா? விஜயகாந்த் ஆவேசம்



தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என பலமுறை கேள்வி எழுப்பினேன். அதற்கு இப்போதுதான் பதில் கிடைத்துள்ளது. முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியிலேயே, சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், போடியில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறுகின்ற முறைகேடுகளை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இதை பொறுத்து கொள்ள முடியாத அ.தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் அ.தி.மு.க.வின் முன்னனி நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தை சீர் குலைக்கும் வண்ணம், கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க.வினரின் இந்த படுபாதக செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியினரால் செய்யப்படும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அதை தடுக்க வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. ரேஷன் கடைகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதாகவும், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கள்ள மார்க்கெட்டுகளில் ரேஷன் பொருட்களை விற்பது என்று ஆளுங்கட்சியினர் மீது ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மை நிலை இப்படி இருக்க, இதை தடுத்து மக்களுக்கு முறையான ரேஷன் பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டிய முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இவற்றை கண்டும் காணாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சட்டமன்றத்தில் தான் எதிர்கட்சிகளை பேசவிடுவதும் இல்லை, எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் விடுவதில்லை, மக்கள் மன்றத்திலாவது இதை சொல்லலாம் என, தேமுதிக இதுபோன்று எதிர்ப்புகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அங்கேயும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதா?

எனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஆளுங் கட்சியினரை, காவல்துறை உடனடியாக கைது செய்து, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில், தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தே.மு.தி.க.வினர் மீது, இது போன்ற அராஜக செயல்களில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டால், தே.மு.தி.க. வினர் இனியும் பொறுமை காப்பார்கள் என்று, யாரும் எண்ண வேண்டாம். இருக்கும் ஒன்றரை ஆண்டு காலமாவது உங்களை, ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள். இல்லையென்றால் “ஆட்சி மாறும், காட்சிகளும் மாறும்’’என்று கூறியுள்ளார்.

ad

ad