புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2024

பிகார் முதல்வராக நிதிஷ் குமார் 9-வது முறையாக பதவியேற்பு - பாஜகவுக்கு 2 துணை முதல்வர்கள்

www.pungudutivuswiss.com
நிதிஷ்குமார் பதவியேற்பு
பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று காலை கொடுத்தார்.

அதனுடன், அவர் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார். பிகார் ராஜ்பவனும் நிதிஷ் குமாரின் ராஜினாமாவை உறுதி செய்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இன்று மதியம் 3 மணிக்கு மேல் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதிவியேற்பார் என முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் கூறினார்.

கடந்த 2022 வரையில், நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து, பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்தார்.

விளம்பரம்

பின், தன்னால், தனித்து செயல்பட முடியவில்லை எனக்கூறி, ஆகஸ்ட் 2022 பாஜக உடனான உறவை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் முதல்வராக இருந்தார்.

பிகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்பட மூலாதாரம்,ANI
அதைத் தொடர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியிலும் அவர் அங்கம் வகித்து வந்தார்.

‘இந்தியா’ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அவர் இன்று (ஜனவரி 28) காலை 11 மணியளவில், தனது ராஜினாமா கடிதத்தை பிகார் மாநில ஆளுநரிடம் அளித்தார்.

முன்னதாக, கட்சியின் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அவர் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பிறந்ததும் பிரிந்து போன இரட்டையர்களை 21 ஆண்டுக்குப் பின் ஒன்று சேர்த்த 'டிக்டாக்' - எப்படி தெரியுமா?
5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் - 22 இந்தியர்கள் என்ன ஆயினர்? கடற்படை விரைவு
27 ஜனவரி 2024
பிகாரில் யாருக்கு எவ்வளவு பலம்?
ஆர்ஜேடி ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான நிதிஷ் குமாரின் அரசு சில காலமாக நீடிக்கிறது. துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.

ஹிந்துஸ்தானி பொது மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் கூறுகையில், பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமார் புதிய ஆட்சி அமைக்கப் போகிறார், என்றார்.

243 இடங்கள் கொண்ட பிகார் சட்டசபையில் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி கட்சிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜேடியுவுக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

நிதிஷ்குமார் 9-வது முறையாக பதவியேற்பு
நிதிஷ்குமாரும், ஜிதன் ராம் மஞ்சி பட மூலாதாரம்,ANI
நிதிஷ்குமார் பிகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார். அவர் 9வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த சம்ரத் சௌத்ரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.

புதிய அரசில் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தாலும், ஆட்சியின் பொறுப்பு பாரதிய ஜனதா கட்சியின் கையிலேயே இருக்கும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தானும், தனது கட்சியின் எம்எல்ஏக்களும் இந்த அரசில் இணைவார்கள் என்று ஜிதன் ராம் மஞ்சி கூறினார்.

சிராக் 2020 முதல் நிதிஷ் குமாருக்கு எதிராக அறிக்கைகள் கொடுத்து வருகிறார்.

கோவில் இருந்த இடத்தில் மசூதியா? ஞானவாபி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன?
5 மணி நேரங்களுக்கு முன்னர்
மசூதி, தேவாலயங்களில் காவிக்கொடி - அயோத்தி ராமர் கோவில் திறந்த பிறகு நாடெங்கும் நடந்தது என்ன?
27 ஜனவரி 2024
என்ன சொல்கிறது காங்கிரஸ்?
நிதிஷ் குமாரின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், "லாலு யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நீண்ட காலத்திற்கு முன்பே இதுகுறித்து என்னிடம் கூறியிருந்தனர். அது இப்போது உண்மை என நிரூபணமாகியுள்ளது," என்றார் அவர்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பியும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ், "அரசியல் கூட்டணியை அடிக்கடி மாற்றும் நிதிஷ்குமார், நிறம் மாறுவதில் பச்சோந்திகளுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார். இந்த துரோகத்தை பிகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

பாரத் ஜோடோ நீதி யாத்திரையைக் கண்டு பிரதமரும், பாஜகவும் பயப்படுகிறார்கள் என்பதும், அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இந்த அரசியல் நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது," என அவர் பதிவிட்டுள்ளாளர்.

நிதிஷ்குமார் அணி மாறுவது இது முதல்முறையல்ல
மோதி மற்றும் நிதிஷ் குமார்பட மூலாதாரம்,HINDUSTAN TIMES
கடந்த 2014இல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், 2013இல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார். பின், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்தார்.

பின், 2017இல், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். பின், 2022இல், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.

ad

ad