புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2024

யுக்திய நடவடிக்கை - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவலை

www.pungudutivuswiss.com


இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்  கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்கு சுகாதாரத்தை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளிற்கு பதில் கடுமையான பாதுகாப்பை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பது குறித்து ஐநா அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 17ம் திகதிக்குபின்னர் 29000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் சிலர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன

சோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியில்லாமல் படையினர் சோதனைகைளை மேற்கொண்டுள்ளனர் போதைப்பொருள் பாவனையாளர்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர் நூற்றுக்கணக்கானவர்களை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பியுள்ளனர் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளி;ன் போது மக்கள் பல்வேறு மீறல்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்,அனுமதியற்ற தேடுதல்கள் கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் மோசமாக நடத்துதல் சித்திரவதை பொதுஇடங்களில் ஆடைகளை களைந்து சோதனை போன்றன இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் தாங்கள் பொலிஸாரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் சமூகத்திற்கு பெரும்சவாலாக காணப்படுகின்ற போதிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை போன்றவறை உரிய அணுகுமுறையில்லை போதைப்பொருள் துஸ்பிரயோகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் முதன்மையாக சமூக மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடயவை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் அவற்றை பயன்படுத்துபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் உரிய முறைகளை பயன்படுத்தவேண்டும் வெளிப்படையான நீதிமன்ற நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தனது யுக்திய நடவடிக்கையை மறுஆய்விற்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித உரிமையை அடிப்படையாக கொண்ட அணுகுமுறையை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

ad