புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2024

சிறிதரன் அழைப்புக்கு ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் நிபந்தனை

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தததைப்போன்று ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாகச் செயற்படுவதற்கான பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ள நிலையில், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கூட்டுக் கட்சியாக பதிவு செய்ய வேண்டும், பொதுச்சின்னமொன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளன.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தததைப்போன்று ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாகச் செயற்படுவதற்கான பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ள நிலையில், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கூட்டுக் கட்சியாக பதிவு செய்ய வேண்டும், பொதுச்சின்னமொன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளன.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இறுதியாக இலங்கை தமிழரசுக்கட்சியே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறைமையைக் காரணம் காண்பித்து வெளியேறியுள்ள நிலையில் அர்த்தமுள்ள ஐக்கியமொன்றை புதிய தலைமையின் கீழ் அக்கட்சி விரும்புகின்றதென்றால் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான தமது நிபந்தனைகள் முதலில் நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்றும் அவை வலியுத்தியுள்ளன.

இவ்விடயம் சம்பந்தமாக, புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற, ஒரேகொள்கையில் பயணிக்கின்ற தரப்பினர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளமையானது வரவேற்கத்தக்கது.

எம்மைப்பொறுத்தவரையில் நாம், ஐக்கியத்தினை ஒருபோதும் எதிர்த்த தரப்பினர் கிடையாது. ஆனால் அவ்வாறு ஐக்கியப் படுகின்ற போது கடந்த காலத்தில் நிகழ்ந்தேறிய சில முக்கிய விடயங்களை கவனத்தில் கொண்டு நாம் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம்.

முதலாவதாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியே கடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தனித்துப்போட்டியிடுவதாகக் கூறி வெளியேறியது.

அதன்பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எஞ்சிய தரப்பாக நாமும், ரெலோவும் இருந்ததோடு ஏனைய தரப்பினரையும் கூட்டமைப்புக்குள் இணைத்து செயற்படுவதற்கு தீர்மானித்தோம்.

அதனடிப்படையில், தேர்தல் விடயங்களை கையாள்வதற்காக நாம் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்கின்ற பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியையும், அதன் சின்னத்தையும் பொதுவானதாக பேணிவருகின்றோம்.

அந்த வகையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும், ஐக்கியத்தினை ஏற்படுத்துவதற்கு, எந்தவொரு தரப்பினரும் ஏகபோகத்தை செய்யாதவகையில் அங்கீகரம் பெற்ற அரசியல் கூட்டொன்றையும், பொதுச்சின்னத்தையும் ஏற்றுக்கொள்வதே பொருத்தமானதாகும்.

இந்த விடயத்தில் இணக்கப்பாடுகளை எட்டுகின்றபோது, தமிழரசுக்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகளிடையே ஏற்படுகின்ற கூட்டு அர்த்தமுள்ளதாக அமையும் என்றார்.

இதேவேளை, ரெலோ தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், ரெலோவைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தின் போதே அதன் ஆரம்பக் கட்சிகளில் ஒன்றாகப் பங்கெடுத்திருந்தது. அன்றுமுதலே நாம் ஐக்கியத்துக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால், தமிழ் மக்களுக்காக அரசியல் கட்சிகளிடையே ஏற்படுகின்ற ஐக்கியமானது, அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு சம அந்தஸ்தை வழங்குவதாக இருப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக கூட்டமைப்பின் ஜனநாயகத்தன்மை, மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

ஆகவே, தான் கடந்த காலத்தில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஒருபொதுவான சின்னம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

தற்போதும் அவ்விதமான நிலைப்பாட்டியேலே உள்ளோம். எம்மைப்பொறுத்தவரையில், அரசியல் கட்சிகளிடையே தேர்தல்கால ஐக்கியத்தை விடவும் வலுவான தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பாக இருக்க வேண்டுமாயின் ஆகக்குறைந்தது மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதே பொருத்தமானது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியானது, தனது வீட்டுச்சின்னத்தை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லாத மனநிலையைக் கொண்டிருக்குமாயின் அத்தரப்பினர் அதனை பொதுச்சின்னமாக ஏற்றுக்கொள்வதற்காகவாவது நெகிழ்வுத்தன்மையுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், புதிய தலைவரின் அழைப்பினை நாம் சாதகமாக பார்க்கும் அதேநேரம், இந்தவிடயங்களை உள்வாங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது நாம் கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறிதரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோரை ஒன்றிணைத்து 2009ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சியே வெளியேறியுள்ளதோடு, ஏனைய கட்சிகள் வெளியேறுவதற்கும் அக்கட்சியே காரணமாக அமைந்திருக்கின்றது என்பது வெளிப்படையானதொரு விடயமாகும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22வருட காலமாக தமிழ் மக்களுக்காகப் போராடும் ஒரு அரசியல் கூட்டாக தன்னை நிறுவனப் படுத்திக்கொள்ளாமல், தேர்தல் காலங்களில் கூட்டாகவும் பின்னர் தமிழரசுக் கட்சியாக முடிவெடுத்துச் செயற்படுவதுமே தொடர்கதையாக இருக்கின்றது.

இந்த நிலையில் தான் இறுதியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சியின் தனிவழி தீர்மானத்தின் பின்னர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது.

அதில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஒருவலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான சிந்தனையுடன் பயணிக்கின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புதிய புதிய அமைப்புகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து, ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணியில் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் அதற்கானதொரு உரையாடலை ஆரம்பிப்பதே பொருத்தமான நகர்வாக இருக்கும் என்றார்.

ad

ad