புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2024

முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முதலில் நடைமுறைப்படுத்துங்கள்

www.pungudutivuswiss.com


இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட  ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

உண்மை ஐக்கியம் நல்லிணக்கம குறித்த ஆணைக்குழு சட்ட மூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

உத்தேச உண்மை ஐக்கியம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு முழுமையானதாக காணப்படலாம் எனினும் இது இலங்கையில் ஆயுதமோதல்களின் போது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்ட பல பொறிமுறைகளில் இதுவும் ஒன்று.

அவ்வாறான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளுடன் தங்கள் சாட்சியங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

உதாரணத்திற்கு நாங்கள் அவ்வாறான ஒரு பொறிமுறையை நினைவுபடுத்துகின்றோம் 2010இல்உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு.

2011 நவம்பரில் இந்த ஆணைக்குழு வெளியிட்ட தனது இறுதி அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த பரிந்துரைகள் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தோன்றிய பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டவை.

பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தங்களின் பயங்கரமான அனுபவங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் தங்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் வெளியான எல்எல் ஆர்சியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்த்தனர். எனினும் இந்த பரிந்துரைகளில் பெருமளவானவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தங்களின் அதிர்ச்சி தரும் அனுபவங்களை மீண்டும் ஒருமுறை பகிர்ந்துகொள்வதை கட்டாயமாக்கும் உண்மையை கண்டறியும் புதிய ஆணைக்குழுவிற்கு வளங்களை ஒதுக்குவதன் முன்னர் கடந்தகாலத்தின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின்ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

இந்த சட்டமூலத்தில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ள அதேவேளை கடந்த காலத்தின் உண்மையை அறியும் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழு; உயர்மட்ட குழுவை ஏற்படுத்தவேண்டும்.

இந்த குழு உரியநிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குழுவின் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் உள்ளடக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட சமூகங்களிற்கு மீண்டும்பாதிப்புகளை ஏற்படுத்தும் மற்றுமொரு பொறிமுறை உண்மையை கண்டறிவதற்கு உதவப்போவதில்லை என நாங்கள் கருதுகின்றோம் முன்னைய ஆணைக்குழுக்களால் உண்மைகள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டிய நேரம் இது.

மேலும் உண்மைக்கான கூட்டு உரிமையை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் பரந்துபட்ட மக்கள் மத்தியில் அவ்வாறான உண்மைகளை பகிர்ந்துகொள்வதற்கு உதவவேண்டும்.

இதன் காரணமாக முன்னைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புகள் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கவேண்டும்.

முன்னைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களினால் கண்டறியப்பட்ட விடயங்களை முழுமையாக நாட்டிற்கு தெரியப்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்படுகின்றது.

இந்த திட்டங்கள் முன்னைய ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புகளை தேசிய பாடத்திட்டத்திற்குள் உள்வாங்கலாம். இது தொடர்பான தேடல்களில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்களிற்கு உதவலாம்.

ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் மூலம் இதனை நடைமுறைப்படுத்தலாம்.

உண்மை மற்றும் பொறுப்புக்கூறலின் ஒன்றுடன் ஒன்றுசார்ந்திருந்தல் தன்மையை இலங்கையின் தற்போதைய நிலைமாற்றுக்கால நீதி நிகழ்ச்சி நிரலிற்குள் உள்வாங்குவதற்காக( கடந்த காலத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட் ஆணைக்குழுக்கள் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய குற்றங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை சுமத்துதலை பரிந்துரை செய்துள்ளதை கருத்தில் கொள்ளும்போது) முன்னுரிமைக்குரிய விடயமாக அவ்வாறான குற்றச்சாட்டுகள் மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சுயாதீன பொறிமுறையை உருவாக்குமாறு பரிந்துரை செய்கின்றோம்.

அவ்வாறான பொறிமுறை போதியளவு வளங்களையும் நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கவேண்டும் - தேவைப்பட்டால் சர்வதேச நிபுணத்துவத்தையும் உள்வாங்கலாம்.

ad

ad