புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2024

பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி?

www.pungudutivuswiss.com

அமெரிக்க படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல் - பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி?

அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல்

பட மூலாதாரம்,PLANET LABS/AP

படக்குறிப்பு,

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க படைத்தளம்

  • எழுதியவர்,எமிலி மெக்கார்வே
  • பதவி,பிபிசி நியூஸ்

சிரியாவுடனான ஜோர்டான் எல்லையில் அமெரிக்க ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என இரான் மறுத்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க படையை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த தாக்குதலுக்கு, “இரானிய ஆதரவு பெற்ற தீவிர ஆயுதக் குழுக்கள்” மீது அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

“நாங்கள் இதற்கு பதிலடி கொடுப்போம்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து இந்த பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புகள் தாக்குதலில் கொல்லப்படுவது இதுவே முதன்முறை.

இந்த பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு (ஜன. 28) முந்தைய தாக்குதல்கள் வரை உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்ததில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இராக்கை சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்பு

இராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் எனும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இராக்கில் செயல்பட்டு வரும் சில இரானிய ஆயுதக்குழுக்களை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு, 2023-ம் ஆண்டின் இறுதியில் உருவானது. சமீப வாரங்களாக அமெரிக்க படைகளின் மீது நடத்தப்பட்ட மற்ற தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் உள்ள மூன்று அமெரிக்க ராணுவ முகாம்களை தாங்கள் குறி வைத்ததாக தெரிவித்துள்ளது. அவை, ஷடாடி, டன்ஃப், ரக்பன் ஆகியவை ஆகும். ரக்பன் சிரியாவின் எல்லையில் ஜோர்டான் பகுதியில் உள்ளது. மத்திய தரைக்கடலில் இஸ்ரேலிய எண்ணெய் நிறுவனத்தையும் தாங்கள் குறி வைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.?

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சிபிஎஸ் ஊடகம், அமெரிக்க முகாமின் டவர் 22-ல் காலை வேளையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அமெரிக்க படையினர் உறங்குவதற்கான குடியிருப்புப் பகுதியில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க ட்ரோன் ஒன்று ராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில், "மிகவும் தாழ்வாகவும் மிக மெதுவாகவும்" அந்த ட்ரோன் வந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தாமல் இருக்க வான் பாதுகாப்பு அமைப்பின் தானாக எச்சரிக்கும் சாதனங்கள் அணைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். இதனால், அந்த ராணுவ முகாமில் ட்ரோன் தாக்குதல் குறித்து துருப்புகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.

அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல்

இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள இராக் அரசாங்கம், மத்திய கிழக்கில் இத்தகைய "வன்முறை சுழற்சியை நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளது.

இராக் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாஸ்ஸெம் அல்-அவாடி, "பிராந்தியத்தில் மேலும் பின்விளைவுகளைத் தடுக்கவும் மோதல் அதிகரிப்பதைத் தடுக்கவும் அடிப்படை விதிகளை நிறுவுவதில் ஒத்துழைக்க" தயாராக இருப்பதாகக் கூறினார்.

”இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

திங்களன்று (ஜன. 29) வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இத்தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க விரும்பினாலும், ஆனால் இரான் அல்லது பிராந்தியத்துடன் ஒரு பரந்த போரை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜோர்டானில் அமெரிக்க துருப்புகளை குறிவைக்க ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தங்கள் நிர்வாகம் நம்புவதாக கிர்பி கூறினார்.

தாக்குதலுக்குக் காரணமான ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்தது.

இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, "பாலத்தீனர்களையோ அல்லது அவர்களின் சொந்த நாடுகளையோ பாதுகாக்க எதிர்ப்பு குழுக்கள் முடிவெடுப்பதில் தாங்கள் பங்கேற்கவில்லை" என்றார்.

இரானுடன் இணைந்த பிராந்திய ஆயுதக் குழுக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி அமெரிக்காவுக்கு பதிலளிப்பதாக இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பிற அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தாக்குதல் குறித்து ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"இந்த வெறுக்கத்தக்க மற்றும் முற்றிலும் அநியாயமான தாக்குதலில் போர் வீரர்களை இழந்ததற்காக துக்கப்படுவதில், ஜில் பைடனும் (அமெரிக்காவின் முதல் பெண்மணி) நானும் நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்களுடன் இணைந்து கொள்கிறோம்" என்று ஜோ பைடன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக், இந்த பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் பணிகளை இரான் தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

”பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைக் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் உறுதியாக நிற்கிறோம்," என்று அவர் கூறினார்.

"இந்த தாக்குதல் சிரியா மற்றும் இராக்கில் இயங்கும் தீவிர இரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்டது" என்று நம்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது.

குறைந்தது 34 ராணுவ வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், காயமடைந்த சில வீரர்கள் மேல் சிகிச்சையில் உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க படைத் தளம் மீது தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரக்பனில் உள்ள தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அதற்கு அமெரிக்க அதிகாரிகள் சூட்டிய பெயர் டவர் 22 என்பதாகும்.

இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் அக்டோபர் 17 முதல் குறைந்தது 97 முறை தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தனர்.

கடந்த மாதம், வடக்கு இராக்கில் இரானுடன் இணைந்த குழுக்களுக்கு எதிராக, அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

முன்னதாக ஜனவரியில், பாக்தாத்தில் அமெரிக்க பதிலடித் தாக்குதல் ஒன்றில், அமெரிக்க படையினர் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒரு ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டார்.

ஏபிசி ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒளிபரப்பப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில், பாதுகாப்புப் படை உயரதிகாரி சி.க்யூ. பிரௌன் இப்பகுதியில் "மோதலை விரிவுபடுத்தக்கூடாது" என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று கூறினார்.

ad

ad