புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2024

தமிழரசு தலைவர் என்ன முடிவு?

www.pungudutivuswiss.com
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வை பிற்போட
வைக்க இரா.சம்பந்தன் முற்பட்டு வருகின்ற நிலையில் போட்டி இல்லாத
தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும் என இரா.சம்பந்தன் தற்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
கட்சி தலைமைய கைப்பற்ற போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று(9) நேரில் சந்தித்து இரா.சம்பந்தன் தனது புதிய கோரிக்கையினை விடுத்துள்ளார்.
மேலும், “கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதே போன்ற நிலைமை தொடர வேண்டும். நாம் தொடர்ந்தும் பலத்துடன் இருக்க வேண்டும். கட்சிக்குள் போட்டிகள் வந்தால் அது கட்சியையும், உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும்.” என இரா.சம்பந்தன் கூறியதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் புதிய தலைவர் தெரிவில் சிறீதரன் மற்றும் சுமந்திரன் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று(10); கொழும்பில் உள்ள இரா.சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad