புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2024

ஜேர்மனியில் இருந்து இரகசியமாக வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட நவீன ஸ்கேனர்: வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது

www.pungudutivuswiss.com

தமிழர் பகுதியில் அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உள்ளிட்ட மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் சுங்க வரியை மோசடி செய்து ஜேர்மனியில் இருந்து இரகசியமாக குறித்த நவீன ஸ்கேனரை கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

ஜேர்மனியில் இருந்து இரகசியமாக வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட நவீன ஸ்கேனர்: வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது | Three Arrested Including Doctor In Vavuniya

பொக்கிஷங்கள் மற்றும் தங்கத்தை தேடும் குழுவினர் தொடர்பில் வவுனியா பொலிஸ் விஷேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முதலாம்  இணைப்பு

வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக இன்று (08.01) அதிகாலை பொலிஸாரின் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த மூவரையும் கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி

சந்தேகநபர்கள் கைது 

இளைஞர் ஒருவர் புதையல் தோண்டும் ஸ்கானர் இயந்திரம் ஒன்றை விற்பனை செய்வதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவு எனத் தெரியாது, புலனாய்வு பிரிவினரிடம் விலைபேசியுள்ளார்.

குறித்த ஸ்கானர் இயந்திரத்தை 15 இலட்சம் ரூபாவுக்கு விலை பேசிய அவர், கார் மற்றும் ஹயஸ் ரக வாகனம் என்பவற்றில் குறித்த ஸ்கானர் இயத்திரத்தை வவுனியா புதிய பேருந்து  நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து இரகசியமாக வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட நவீன ஸ்கேனர்: வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது | Three Arrested Including Doctor In Vavuniya

இதன்போது அங்கு நின்ற பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த ஸ்கானர் இயந்திரத்தை கைப்பற்றியதுடன், அதனை உடமையில் வைத்திருந்த வைத்தியர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டனர்.

34 வயதுடைய மதாவாச்சியை சேர்ந்த வைத்தியர், 38 வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

மீட்கப்பட்ட ஸ்கானர் இயந்திரம் மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா பொலிஸ்சில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ad

ad