புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2024

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு! [Saturday 2024-01-13 06:00]

www.pungudutivuswiss.com


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.  மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்தனர்.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வற் வரியை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வீதிக்கு இறங்குவார்கள் இதனை தடுப்பதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பன கொண்டு வரப்பட்டுள்ளன.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் விவாதத்தக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.நாட்டு மக்களை அடக்கும் சட்டமூலத்தை சமர்ப்பித்து அரசாங்கம் புதிய வருடத்தை ஆரம்பித்துள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பன நாட்டு மக்களின் பேச்சு சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்.

நாட்டு மக்களின் அடிப்படை பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ad

ad