 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார். பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது |