-
20 ஏப்., 2014
பயங்கரவாதத்தில் ஈடுபட வேண்டாம்; முன்னாள் போராளிகளுக்கு அறிவுரை கூறிய இராணுவம்
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இராணுவத்தினர், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று "அறிவுரை' கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தலைவர் பதவியை உதறினார் சி.வி.கே
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரம் பகிரப்பட வேண்டும்; ஆவன செய்வோம் என்கிறது பா.ஜ.க.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு பாரதிய ஜனதாக் கட்சி முழுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ள அந்தக் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், இலங்கையில்
சமாதான பேரவையின் கோரிக்கையை ஏற்று, தமிழருக்கு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி!- இரா.சம்பந்தன்
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, தமிழருக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சுயாட்சியை வழங்குவதே இலங்கை அரசுக்கு சிறந்த வழியாகும். என தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்
சண் சீ கப்பலில் தொடரும் இழுபறி - கனேடிய நீதிமன்றம் குழப்பத்தில்
கனடாவில் ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று ஈழத் தமிழர்களை நாடுகடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான தேரர் காலமானார்
கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் சிகிச்சை பயனின்றி இன்று காலமாகியுள்ளார்.
இரணைமடு நீரைக் காக்க ஸ்ரீதரன் எம் பி ஆதரவு விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.ஸ்ரீதரன் எம் பி யின் இரட்டை வேடம் கலையுமா ?
அண்மைக்காலமாக தீவுப்பகுதியை குறி வைத்து வாக்கு வங்கியை பேருக்கும் நோக்கில் ஸ்ரீதரன் எம் பி அவர்கள் தான் தீவுப்பகுதியை சேர்ந்தவன் என்றும் அதனால தீவுப்பகுதியை விசேசமாக அபிவிருத்தி செய்வதில்
19 ஏப்., 2014
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,சுவிற்சர்லாந்து .
ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விடுக்கும் பகிரங்க அறிக்கை
*முதலாவது செயல் திட்டமாக சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.
*எமது இரண்டாவது செயற்திட்டமாக,
சில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி செய்ய வேண்டுமென்று அவருடைய உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது தெரிந்ததே. இதற்கு அமைவாக, இம்மாதம் முதல், மாதாமாதம் சிறியதோர் நிதி உதவியினை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் "தனது குடும்பத்தின் சார்பில்" சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். (ஆயினும் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் இங்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.)
ஒன்றியத்தின் இவ்வருடத்திற்கான செயற்திட்டங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)