புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014


சமாதான பேரவையின் கோரிக்கையை ஏற்று, தமிழருக்கு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி!- இரா.சம்பந்தன்
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, தமிழருக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சுயாட்சியை வழங்குவதே இலங்கை அரசுக்கு சிறந்த வழியாகும். என தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் தேசிய சமாதானப் பேரவை விடுத்துள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை அமைதியை ஏற்படுத்த முடியும். தமிழர் பிரச்சினை இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் தேசிய சமாதானப் பேரவை நேற்று முன்தினம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை மீள ஆரம்பிக்குமாறும் அது இலங்கை அரசைக் கோரியுள்ளது. அண்மையில் நெடுங்கேணியில் வைத்து மூன்று தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னணியில் உருவாகியிருக்கும் நிலைமையை அடுத்து தேசிய சமாதானப் பேரவை அவசரமாக இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. விசாரணைக்கு இலங்கை அரசு முகம்கொடுக்க வேண்டி வந்துள்ளது. அதையடுத்து வடக்கில் இராணுவத்தின் வன்முறைகள் தலை விரித்தாடுகின்றன.
இந்த வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவும் தமிழருக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சுயாட்சியை வழங்குவதே இலங்கை அரசுக்கு சிறந்த வழியாகும்.
நாட்டில் அசாதாரண நிலைகள் ஏற்படுகின்ற போது அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தேசிய சமாதானப் பேரவை இலங்கை அரசுக்கும் ஏனைய தரப்பினருக்கும் பல அறிவுரைகளைக் கூறி வருகின்றது. அந்தவகையில் தற்போது அந்தப் பேரவை விடுத்துள்ள அவசர வேண்டுகோளை நாம் மனதார வரவேற்கின்றோம்.
நாட்டின் முன்னேற்றம் கருதியே இந்த வேண்டுகோளை சமாதானப் பேரவை விடுத்துள்ளது. இந்தப் பேரவை தமது அறிக்கையில், வடக்கில் தற்போது நடைபெற்று வரும் உண்மைச் சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
ஐ.நா. விசாரணை ஆணைக்குழுவுக்கு ஒத்துழைக்கும் வகையில் உள்ளூரில் விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றவாறு தமது செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கவேண்டும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad