புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

பயங்கரவாதத்தில் ஈடுபட வேண்டாம்; முன்னாள் போராளிகளுக்கு அறிவுரை கூறிய இராணுவம் 
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இராணுவத்தினர், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று "அறிவுரை' கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

 
முல்லைத்தீவு பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியைத் தோற்றுவித்துள்ளது. நேற்று முன்தினம் குறித்த முன்னாள் போராளிகளது வீடுகளுக்குச் சென்ற இராணு வத்தினர் நேற்றையதினம் கூட்டம் ஒன்று உள்ளதாகவும் அதற்கு வருமாறும் கூறிச் சென்றிருந்தனர்.
 
அதற்கமைய  நேற்று முற்பகல் 9 மணியளவில் வாகனங்கள் அனுப்பிய இராணுவத்தினர், முன்னாள் போராளிகளை மட்டும் அவற்றில் ஏற்றிச் 
பயங்கரவாதத்தில் செல்ல முற்பட்டனர். 
 
அதையடுத்து அவர்களைக் கூட்டிச் செல்வதாக இருந்தால் அவர்களுடன் தாமும் வருவோம் என்று முன்னாள் போராளிகளது பெற்றோர் இராணுவத்தினருடன் முரண்பட்டனர்.
 
அதனையடுத்து முன்னாள் போராளிகளையும்,அவர்களது பெற்றேரரையும் இராணுவத்தினர் ஜனகபுரத்துக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அங்கு வைத்து பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்கிப் பிற்பகல் 3 மணியளவில் அவர்களுக்கு ஒவ்வொரு சறமும் கொடுத்துத் திருப்பி அனுப்பியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மற்றும் கருணாட்டுக்கேணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கே இவ்வாறு இராணுவத்தினரால் அறிவுரை வழங்கியுள்ளனர்.
 
இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் முன்னாள் போராளிகளை மாத்திரமின்றி அவர்களது பெற்றோர்களையும் கடும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் தமது அன்றாட நடவடிக்கைகளையும் விட்டு அலைய வேண்டியுள்ளது என்றும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

ad

ad