புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

இரணைமடு நீரைக் காக்க ஸ்ரீதரன் எம் பி ஆதரவு விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.ஸ்ரீதரன் எம் பி யின் இரட்டை வேடம் கலையுமா ?
அண்மைக்காலமாக தீவுப்பகுதியை குறி வைத்து வாக்கு வங்கியை  பேருக்கும் நோக்கில் ஸ்ரீதரன்  எம் பி அவர்கள் தான் தீவுப்பகுதியை சேர்ந்தவன் என்றும் அதனால தீவுப்பகுதியை விசேசமாக அபிவிருத்தி செய்வதில்
ஆர்வம் காட்டுகிறேன் என்றும் சொல்லி திரிகிகிறார் .ஆனால் இரணைமடு நீர் விநியோக திட்டம் யாழ்  குடாவுக்கு புங்குடுதீவு வரை செல்லவிருக்கும் வேளை அந்த திட்டத்தை எதிர்ப்பதில் மும்முரமாய்  கிளிநொச்சி விவசாயிகளை தூண்டி விட்டு போராட்டங்களை நடத்த  ஊக்குவிக்கிறார் என்ற குற்றசாட்டு கிளம்பி உள்ளது அதிகார மேதாவிகளால் அரச ஊடகங்களில் கிளிநொச்சி விவசாயிகளை துரோகிகளாக சித்தரிக்கும் கயமைத்தனத்தைக் கண்டித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலியுறுத்தியும் மாபெரும்
அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் கிளிநொச்சியில்   விவசாயிகளால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இரணைமடு விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
விவசாயச் செய்கைக்கு நீர் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் இரணைமடு குளத்திலிருந்து குடாநாட்டுக்கு நீர் விநியோகம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு கிளிநொச்சி விவசாயிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு நிலவிவருகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தமது அமைப்பு தீர்மானித்துள்ளதாக இரணைமடு விவசாய சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.
இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும், குடாநாட்டு – கிளிநொச்சி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புரளியான செய்திகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டுவரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முத்து சிவமோகன் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி விவசாயிகளை துரோகிகளாக அரச ஊடகம் வெளியிட்டுவரும் செய்திகளுக்கு எதிராகவும் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
அரச கைக் கூலிகளினதும் அதிகார முதலைகளினதும் கூடாரமாகியுள்ள மண்ணில் மக்களின் சாத்வீக போராட்டங்கள் எவ்வாறு கையாலப்படப்போகின்றன என்பதே அனைவரினதும் எதிர் பார்ப்பாகும்

ad

ad