செம்மணி குறித்த சர்வதேச விசாரணை கோரி 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம்! [Tuesday 2025-08-26 07:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29 ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது |
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோருடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர். |
-
26 ஆக., 2025
www.pungudutivuswiss.com