புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

யாழிலேயே முதல்தடைவையாக தமிழில் மந்திர உச்சாடன பயிற்சிநெறி 
சைவநெறிக் கூடம், சைவ மகா சபை, தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்தும் தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. 


இலங்கையிலேயே முதலாவது முறையாக தமிழ் மொழில் மந்திர உச்சாடனம் செய்யும் பயிற்சி நெறி யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டு இன்று அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்தப்பயிற்சி நெறிக்காக வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 36பேர் கலந்து கொண்டனர். இதன்மூலம் கிராமங்களில் உள்ள ஆலயங்களுக்கு பூஜையினை மேற்கொள்வதற்கு இலகுவாக அமையும்.
 
இவர்களுக்கான பயிற்சிகள் தமிழ்நாட்டில் இருந்து   அழைக்கப்பட்ட சத்தியவேல் முருகனார் என்பரால் மேற்கொள்ளப்பட்டன.  மேலும் பல மாணவர்களும் குறித்த பாடநெறிக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்கு க. கலியுகவரதன்  சைவ மகா சபை, சத்தியவேல் முருகனார் தெய்வத் தமிழ் அறக்கட்டளை தமிழ்நாடு, கலைப்பீடாதிபதி யாழ். பல்கலைக்கழகம் பசுபதி சிவநாதன், இதய சிகிச்சை நிபுணர் யாழ். போதனா வைத்தியசாலை , சங்கானை பிரதேச செயலர் சங்கானை மற்றும் சைவப்பெரியார்களும் கலந்து கொண்டனர்.





ad

ad