புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

வழக்கில் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை: கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் எச்சரிக்கை
மத்திய மந்திரி கபில் சிபலின் மகன் அமித் சிபல் தனது தந்தையின் மந்திரி பதவியை பயன்படுத்தி ஆதாயமடைந்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்
அக்கட்சியைச் சேர்ந்த மணிஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷன், சாஷியா இல்மி ஆகியோர் கடந்த ஆண்டு புகார் கூறியிருந்தனர். இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறி அமித் சிபல் டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மாதம் 15-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவாலும், சிசோடியாவும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் அப்போது மாஜிஸ்திரேட்டு தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் வழக்கு விசாரணை நடைபெறும் நாட்களில் நால்வரும் தவறாமல் ஆஜராகும்படியும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு  டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சுனில் குமார் முன்னிலையில் இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. எனினும், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அப்போது, கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால் கோபமடைந்த மாஜிஸ்திரேட்டு அடுத்த கட்ட விசாரணையின்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தவறாமல் கோர்ட்டில் ஆஜராகவேண்டும். இல்லையென்றால், அவர்கள் கட்டாயம் ஆஜராகும் நடவடிக்கையை கோர்ட்டு எடுக்கும் என்று எச்சரித்து வழக்கின் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

ad

ad