முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் சந்தித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி ஆஜராகவில்லை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பிறந்த நாள் பரிசு வழக்கு: 3 வாரங்களில் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பிறந்த நாள் பரிசு வழக்கில் 3 வாரங்களில் பதில் அளிக்க ஜெயலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பில் இலங்கை விசாரணை நடத்தவேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படும் ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம்
த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் ஐங்கரநேசன் வீட்டில் கழிவு ஒயில் வீசித் தாக்குதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளதுடன், வீட்டு வாசலின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கே இவ்வாறு கழிவு ஒயில் வீசித் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் இருந்து மன்னார் நோக்கி சென்ற தனியார் பஸ் தடம்புரண்டது: 30 பேர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ-32 வீதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சுமார் 30 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வெலிவேரிய தாக்குதல் சம்பவம்! நான்கு உயர் இராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்!
வெலிவேரிய, ரத்துபஸ்வல கிராம மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு உயர் இராணுவ அதிகாரிகள் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறல்கள்: கண்ணை மூடிக் கொள்ளுமா ஐ.நா?
எதிர்வரும் செப்டம்பர் மாத மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் இராணுவ முகாம்கள் வெற்றுப்படுத்தப்படும் என்று இராணுவவத்தினர் அறிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும்: விக்னேஸ்வர
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடபகுதிக்கு விஜயம் செய்த போது, அவரிடம் முறைப்பாடுகளை முன்வைத்த பல பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக நவிபிள்ளையிடம்
ஐநா மனித உரிமை ஆணையாளர் திருமதி.நவநீதம்பிள்ளைக்கும் த.தே.கூ தூதுக்குழுவினருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பில் இறுதிப் போரின் போதன யுத்தக்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல் போன்றவற்றுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தேவை என்று வலியுத்தப்பட்டது.
திரு.எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பாஜக அணியில் தேமுதிக?… விஜயகாந்திடம் பேச்சு நடத்தியலோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றுவிடும் என்ற நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் தேமுதிகவை தமது அணிக்கு கொண்டு வர மும்முரம் காட்டி
டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில்
நவநீதம்பிள்ளையின் திட்டமிடப்படாத திடீர் சந்திப்பு, களப்பயணம் – அரசாங்கம் குழப்பம்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சில திடீர் சந்திப்புகளையும், களஆய்வையும் மேற்கொண்டுள்ளார்.
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி ஜெகதீஸ்வரன் அவர்கள் 27/08/2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாசிலாமணி அன்னலட்சுமி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை சொர்ணலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மஜீதன், யசிந்தன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதி, மன்மதராசா, உதயசோதி, கலா, பவானி, ஜீவா, கிருபா ஆகியோரின் அன்புச் சகோதரனும்.
வரதராசா, காலஞ்சென்ற ஜெயராசா, ராஜலட்சுமி(UK), சிவானந்தன்(UK), மாகாலட்சுமி, சதானந்தன்(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 29/08/2013 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பையன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447939637040
மஜீதன் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94777698409
உங்கள் பிள்ளைகளை அனுப்பிய இடத்திற்கே உங்களையும் அனுப்புவதா" ? சிறிலங்கா படையினர் அச்சுறுத்தல்
இலங்கைத்தீவுக்கு பயணத்தினை மேற்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அம்மையார் அவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பலர் ,சிறிலங்கா படையினராலும் புலனாய்வாளர்களினாலும் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அவசரக் கோரிக்கை வெளிவந்துள்ளது.