புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2025

www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மீது மர்ம ட்ரோன் கண்காணிப்பு!
[Thursday 2025-10-02 17:00]

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஜேர்மனியின் வடக்கு மாநிலமான Schleswig-Holstein-ல் உள்ள முக்கிய மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் கண்காணிப்பு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் கடந்த வாரம் Rendsburg-Eckernforde மாவட்டம் மற்றும் கீல் (Kiel) நகரத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் சபீன் சுட்டர்லின்-வாக் (Sabine Sütterlin-Waack), பல வகைகள் மற்றும் அளவுகளில் ட்ரோன்கள் பறந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜேர்மனியின் Der Spiegel பத்திரிக்கையின் தகவலின்படி, செப்டம்பர் 25-ஆமா திகதி கீல் நகரில் உள்ள மின் நிலையம், பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் போர்க்கப்பல் தொழிற்சாலை மீது ட்ரோன்கள் பிறந்துள்ளன.

குறிப்பாக parent drone மற்றும் combined drone system போன்ற தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் மருத்துவமனை மீது பறந்ததாக உள்நாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Mecklenburg-Western Pomerania மாநிலத்தில் உள்ள இரன்டுவ தளங்கள் மற்றும் கடற்படை கட்டுப்பாட்டு மையங்களிலும் ட்ரோன்கள் பறந்துள்ளன. இந்த ட்ரோன் நடவடிக்கைகள் ரஷ்யாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

ad

ad