புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

வெலிவேரிய தாக்குதல் சம்பவம்! நான்கு உயர் இராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்!
வெலிவேரிய, ரத்துபஸ்வல கிராம மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு உயர் இராணுவ அதிகாரிகள்   பணியிலிருந்து  விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் உத்தரவுக்கிணங்க இராணுவத்தில் பிரிகேடியர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும், லெப்டினன் கேணல் பதவிநிலை வகிக்கும் அதிகாரிகள் மூவருமே இவ்வாறு பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிவேரிய தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், அவ்விசாரணைகள் முடிவடையும் வரையில் மேற்படி இராணுவ அதிகாரிகள் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
சுத்தமான குடிநீர் கோரி கடந்த முதலாம் திகதி, ரத்துபஸ்வெல கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினருக்கும் அம்மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

ad

ad