புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

காணாமல்போனோர் தொடர்பில் இலங்கை விசாரணை நடத்தவேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படும் ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
1980 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் இதுவரை 12ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். இது ஈராக்குக்கு அடுத்தப்படியாக உள்ள காணாமல்போனோர் தொகையாக கருதப்படுகிறது.
எனினும் இலங்கையின் உத்தியோகபூர்வமற்ற நிலையில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் குறித்த காணாமல் போனோர் தொடர்பில் உண்மையான விசாரணைகள் இதுவரை நடத்தப்படவில்லை.
பொய்யான வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கைக்கான நிபுணர் யொலன்டா பொஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் இந்தக்குழுவின் சுயாதீன தன்மை தொடர்பாக மன்னிப்பு சபை கேள்வி எழுப்பியுள்ளது.

ad

ad