மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்! [Thursday 2025-09-25 03:00] |
![]() மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. |
-
25 செப்., 2025
இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேச நேரம் கேட்கிறது தமிழரசு! [Wednesday 2025-09-24 18:00] |
![]() தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்திப்பைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில், எமது கட்சியின் அண்மைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. |
தலாவவில் கோர விபத்து - 3 பேர் பலி! [Thursday 2025-09-25 08:00] |
![]() குருணாகல்-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர் மேலும் நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். |
குருநாகலில் கேபிள் கார் அறுந்து 7 பிக்குகள் பலி- 6 பேர் படுகாயம்! [Thursday 2025-09-25 08:00] |
![]() குருநாகல் - மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மாலை பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய பிக்குகளும், கம்போடிய பிக்கு ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளனர். |