புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2020

ஏரிஎம் கருவி வாகனங்கள் மூலம் வாடிக்கையாளருக்கு சேவை

தமது வாடிக்கையாளர்கள் பணம் பெற வசதியாக சில வணிக வங்கிகள் ஏரிஎம் கருவிகள் பொருத்திய வாகனங்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தி வருகின்றன.

ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வாடிக்கையாளர் வசிக்கும் இடங்களுக்கே சென்று, ஏரிஎம் இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இடமளிப்பது இதன் நோக்கமாகும்.

ஹற்றன் நஷ்னல் வங்கி, கொமர்ஷல் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி போன்ற வங்கிகள் இன்று கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஏஎரிஎம் ரோந்துச் சேவையை நடத்துகின்றன. வாகனங்கள் செல்லும் இடங்கள், நேரங்கள் பற்றிய விபரங்களை வங்கிகளின் இணையத்தளங்களில் அறியலாம்