புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2020

ஒரே ஒரு முட்டாள்தனமான போதகரால் மட்டுமே யாழ்ப்பாணம் இப்படி அல்லோலகலப்படுகிறது சுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்

இலங்கையிலும் கொரோனா தொற்று இனம் காணப்பட்டதும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் 1300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம் எனவும் அந்த நேரத்திலே தான் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமையை வைத்துக் கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது. அரியாலை ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையோடு விடுவிப்பதற்கு தயாரான நிலையில் இருந்தவர்கள். எனினும் பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆகவே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்ததைவிட மக்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad