6 ஏப்., 2020

 சுவிஸ்  போன்று பிரான்சில் நெருக்கடி நீடிக்கும் வரை நிதி உதவி! - நிதி அமைச்சர் உறுதி

பிரான்சில் தற்காலிக வேலையிழந்தோருக்கான இழப்பீடு 'நெருக்கடி நீடிக்கும்' காலம் வரை வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரான்சில் முதல்கட்டமாக ஐந்து மில்லியன் ஊழியர்களுக்கு (குறுகியகால வேலை இழந்தோருக்கு) ஊதியம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் Bruno Le Maire மேலும் தெரிவிக்கையில், <<கடந்த எட்டு நாட்களில் 100,000 நிறுவனங்களுக்கு €20 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளோம். பொருளாதாரத்தை தக்கவைப்பதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடி நிலமைகள் நீடிக்குமானால், €300 பில்லியன் வங்கிக்கடன் பெற்று பொருளாதாரத்தை காப்பாற்ற நேரிடும்>> என நிதி அமைச்சர் Bruno Le Maire தெரிவித்தார்.
இந்த 100,000 நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து மில்லியன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 450,000 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் இழப்பீடு கோரியுள்ளதாகவும், அவர்களுக்கு <<தேவைக்கேற்ப நிதி வழங்கப்படும்>> எனவும் நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.