புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2020

யாழில் காவல்துறையிடம் வசமாக சிக்கிய 10 பெண்கள் உட்பட்ட 37 பேர்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.நகருக்குள் காரணமில்லாமல் நடமாடிய 10 பெண்கள் உள்ள டங்கலாக 37 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் இன்று திங்கட்கிழமை மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது. இதனால் முற்பகல் 10 மணியளவில்

போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களில் செல்வோரிடம் விசாரணை நடத்தினர். இதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்தவர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

காரணமின்றி பயணித்தவர்களை பொலிஸார் தடுத்துவைத்துள்ளனர். அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்
என்றும் அவர்களது வாகனங்கள் அசாதாரண நிலை முடியும் வரை தடுத்துவைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad