புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2020

கனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகரான இவர் மரணமடைந்துள்ளார்.

ஏற்கனவே வைத்தியர் கடமையில் இருந்து இளைப்பாறிய இவர், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மீண்டும் கடமையில் இணைந்து கொண்டவர்.

சில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயர்களுக்கு சிகிச்சையளித்து வந்த இவரும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்