புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2020

ஜேர்மனியில் ஒரேநாளில் 5,600பேருக்கு கொரோனா உறுதி! நாட்டைக் காக்க தாயகம் திரும்பிய இளம் மருத்துவர்கள்

ஜேர்மன் நாட்டில் கொரோனா தொற்று ஒரே நாளில் 5,600பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில் “ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,000ஐ கடந்துவிட்டது. சனிக்கிழமை மட்டும் 5,600பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 147பேர் பலியாகியுள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1444பேர் மொத்தம் பலியாகியுள்ளனர். 26,000க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜேர்மனியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வந்தாலும் நோயாளிகளின் உயிரிழப்பை அந்நாடு வெற்றிக்கரமாக தடுத்து வருகிறது. மேலும் ஜேர்மனியை சேர்ந்த இளம் மருத்துவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து தாய் நாடு திரும்பி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad