புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2012

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் மாணவியின் உடல் வந்து இறங்கியபோது அங்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரச் தலைவர் சோனியா காந்தி ஆகியோர், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து அம்மாணவியின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நடைபெற்ற மதச்சடங்குகளுக்கு பின்னர் மாணவியின் உடல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவாராகா செக்டார் 24 ல் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் கே.பி. என்.சிங்,மேற்கு டெல்லி எம்.பி. மஹாபால் மிஸ்ரா,டெல்லி பா.ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இறுதிச்சடங்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடயே மாணவியின் மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.டெல்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.முக்கிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் மாணவியின் உடல் வந்து இறங்கியபோது அங்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரச் தலைவர் சோனியா காந்தி ஆகியோர், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து அம்மாணவியின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நடைபெற்ற மதச்சடங்குகளுக்கு பின்னர் மாணவியின் உடல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவாராகா செக்டார் 24 ல் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் கே.பி. என்.சிங்,மேற்கு டெல்லி எம்.பி. மஹாபால் மிஸ்ரா,டெல்லி பா.ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இறுதிச்சடங்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடயே மாணவியின் மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.டெல்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.முக்கிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ad

ad