அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்களைப்பெற்று 284 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு வோர்ன்-முரளி கிண்ணத்திற்கான மூன்று போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இத் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மெல்பேர்ணில் ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களால் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளமுடியாது தடுமாறி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இலங்கை அணி சார்பாக சங்கக்கார 58 ஓட்டங்களையும் பிரசன்ன ஜயவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோண்சன் 4 விக்கெட்டுகளையும் பேர்ட், சிடில், லெயோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்சில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 440 ஓட்டங்களைப்பெற்று 284 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக மைக்கல் கிளார்க் 106, வொட்சன் 83, மிட்சல் ஜோண்சன் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
பந்து வீச்சில் இலங்யை அணி சார்பாக தம்மிக்க பிரசாத் 3விக்கெட்டுகளையும் எரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 440ஓட்டங்களைப்பெற்று 284 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

மிட்சல் ஜோண்சன் 73 ஓட்டங்களுடனும் லெயோன் ஓட்டமெதனையும் பெறாது களத்திலுள்ளனர்.