புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012


மறைந்த நடிகர் செல்வசேகரனுக்கு கலைஞர்கள் பலரும் அஞ்சலி

நேற்று காலமான நடிகர் உபாலி செல்வசேகரனுக்கு கலைஞர்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.

மேடை நாடகம், வானொலி, தொலைக்காட்சி, தமிழ் சிங்கள திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்றவர் உபாலி செல்வசேகரன் இறக்கும் போது வயது 64.
அன்னாரது பூதவுடல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் கலைஞர்கனிதும் பொது மக்களினதும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவரது பூதவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
கொழும்பு சென். பெனடிக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் வானொலியில் ஒலிபரப்பான “கோமாளிகள்” நாடகத் தொடரில் சிங்கள மொழியில் பேசி நடித்து புகழ்பெற்றதையடுத்து உபாலி செல்வசேகரன் என அழைக்கப்பட்டார்
.

ad

ad