புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2012

ஹத்துருசிங்கவின் முன் மண்டியிட்டு தாய்மார்கள் அழும் போது படையினரின் பலகாரத்தை ருசித்துக் கொண்டிருந்த வசந்தி அரசரட்ணம் !!!

கைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.

அவர்களை அவரே காப்பாற்றுவார்” யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், கைதான மாணவர்களது பெற்றோர்கள் மத்தியில் இறுமாப்புடன் பேசிய விடயம் இது.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகம் இராணுவ மயமாகி இருந்தது. 27ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாள் என்பதாலும் அன்றே மாவீரர் தினமும் கொண்டாடப்பட்டது என்பதாலும் பல்கலை வளாகத்தை இராணுவம் முற்றுகையிட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் முழு முயற்சி எடுத்திருந்தனர். இராணுவப் புலனாய்வாளர்களின் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மாணவர்கள் போரில் இறந்து போன தமது உறவுகளுக்காக அஞ்சலிக்க வேண்டிய தமது கடமையை நிறுத்திவிடவில்லை.

உணர்வுகளை எப்படித்தான் கட்டுப்படுத்துவது? அவர்கள் அமைதியான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றி விட்டனர். ஆனாலும் 27ஆம் திகதி இரவு இராணுவத்தினர் சீருடையுடன் பெண்கள் விடுதிக்குள் புகுந்து விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து 28ஆம் திகதி காலை பல்கலை மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். அவர்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகப் பிரதான வாயிலில் இருந்து விஞ்ஞான பீட வாயில் வரை பேரணியாகச் செல்வது என அவர்கள் திட்டமிட்டிருந்தனர். பேரணியாக மாணவர்கள் நகரத் தொடங்கியபோது வளாகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் திடீரென மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

காரணமற்ற கைது

ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட அன்று நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஓரிரு மணித்தியாலயங்களில் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிற்பாடு ஸ்ரீரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜனமேஜெயந், மருத்துவ பீட மாணவன் சுதர்சன், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சொலமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அன்று நள்ளிரவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள்களின் பின்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பவானந்தன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்.

மருத்துவ பீட மாணவன் சுதர்சன் மூன்று நாள்களில் விடுவிக்கப்பட ஏனைய நால்வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெலிக்கந்த, கந்தக்கடுவ புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுக்கும் ஸ்ரீரெலோ காரியாலயத்துக்கு பெற்றோல் குண்டு வீசியவர்களுக்கும் முடிச்சுப்போட நினைத்தவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப்புலிகளின் மாவீரர் நாளைக் கொண்டாடியமைக்காகவே கைதானார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இராணுவத் தளபதியின் கண்டுபிடிப்பு

புனர்வாழ்வு பெற்றுவரும் நான்கு மாணவர்களும், தலைவர் இருக்கிறார் என வாதிடுகிறார்களாம். வெளிநாட்டில் இருக்கும் புலி ஆதரவாளர்களே இவர்களுக்கு உரமூட்டுகிறார்களாம்.

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகும், அதன்மூலம் நாங்கள் தமிழீழம் பெறுவோம் என்று அடாப்பிடியாய் நிற்கிறார்களாம். இதனால் அவர்களை இப்போதைக்கு விடுதலை செய்யமுடியாது என்று அடித்துக் கூறியிருக்கிறார் இராணுவத் தளபதி.

தாயின் புலம்பல்

நடைபெற்ற சந்திப்பில் கைதான மாணவர்களின் பெற்றோர்களும் உடனிருந்தனர். இராணுவத் தளபதியின் கருத்துக்களைக் கேட்டதும் அந்தத் தாய்மார் எழுந்து “ஐயா, எங்கள் பிள்ளைகள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள், அவர்கள் அப்படியானவர்கள் அல்லர். அவர்களை விடுதலை செய்துவிடுங்கள்” என்று இரந்துள்ளனர்.

தாய்மாரின் கண்ணீரை நிராகரித்த இராணுவத் தளபதி உங்கள் பிள்ளைகள் இப்படித்தான் பேசுகிறார்கள். நேற்றும் கூட அவர்கள் அதனைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். விரும்பினால் உங்கள் பிள்ளைகளை நீங்கள் சந்திக்கச் செல்லும்போது முடிந்தால் “பிரபாகரன் பற்றியோ விடுதலைப் போராட்டம் பற்றியோ பேசாதிருக்கச் சொல்லுங்கள்” என்றார்.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவின் முன்பு தாய்மார்கள் கதறுவதையும், அவர்களை ஒரு புழுவைப் போல் இளக்காரமாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி பார்ப்பதையும் அருகில் எதுவும் அறியாத அப்பாவிபோல் இருந்து பலகாரத்தை ருசிக்கும் யாழ் பல்கலைத் துணைவேந்தர் வசந்தி அரசரட்னத்தையும் படத்தில் பார்க்கின்றீர்கள்..

ad

ad