புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012

ஐ.சி.சி. 20 ஓவர் பேட்டிங் தரவரிசை: விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேற்றம்
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் வாழ்நாளில் சிறந்த நிலையாக, 5-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.


இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 20 ஓவர் போட்டிகளைத் தொடர்ந்து இன்று சர்வதேச தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இரு தொடர்களிலும் நடைபெற்ற 4 போட்டிகளில் கோலி 95 ரன்கள் அடித்தார். இதனால் 731 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற கோலி, பேட்டிங் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்தார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 124 ரன்கள் விளாசிய யுவராஜ் சிங், 6 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்தார். பந்துவீச்சு தரவரிசையிலும் அவர் 36-ல் இருந்து 35-வது இடத்திற்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்கள் டோனி 28-ல் இருந்து 25-வது இடத்திற்கும், ரகானே 79-ல் இருந்து 74-வது இடத்திற்கும் முன்னேறினர்

ad

ad