புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012



பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்க
65 புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தில் 65 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


ஜல்பாய்குரி மாவட்டத்தில் இன்ற நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியபோது,  ‘’எனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல் இதுவரை 10 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 16 மனித உரிமை நீதிமன்றங்களும், 158 விரைவு நீதிமன்றங்களும் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை சமாளிக் கும் வகையில், அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை, விரைவில் 65 ஆக அதிகரிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஒரு இன்ஸ்பெக்டர், 8 சப்-இன்ஸ்பெக்டர், 30 கான்ஸ்டபிள்கள் என 47 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ad

ad