புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2012



அழகிரி மகனிடம் 100 கேள்விகள் கேட்டுஅதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை 
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 



ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் பங்குதாரரும், மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகனுமான துரைதயாநிதி, அவருடைய நண்பர் நாகராஜ் உள்பட பலர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையில் துரைதயாநிதி முன் ஜாமீன் பெற்றார். ஐகோர்ட்டின் உத்தரவுப்படி அவர் தினமும் கீழவளவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.
இந்த நிலையில் துரைதயாநிதிக்கு சம்மன் அனுப்பி மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். துரைதயாநிதி நேற்று காலை 10.30 மணி அளவில் காரில் கீழவளவு போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட வந்தார்.
அப்போது மேலூர் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் துரை தயாநிதியிடம் சம்மன் ஒன்றை வழங்கினார். அதில், இன்று (27-ந்தேதி) காலை 11 மணி அளவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


சம்மனை பெற்றுக்கொண்ட துரைதயாநிதி இன்று காலை 11.25 மணிக்கு காரில் சர்வேயர் காலனியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் வக்கீல்கள் மோகன்குமார், குபேந்திரன், நந்தகோபால், செந்தில், வேல்முருகன் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.
பின்னர் துரைதயாநிதி, விசாரணை அதிகாரிகளான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் முன்பு ஆஜரானார்.

ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் எப்போது பங்குதாரராக சேர்ந்தீர்கள்? எவ்வளவு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது? அதன் மதிப்பு என்ன? என்பது உள்பட 100 கேள்விகளை கேட்டு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இன்று மாலை வரை நடைபெறும் என்று தெரிகிறது.

ad

ad