புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012


டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி ஒண்டோரியோ நீதிமன்ற நீதிபதி John Macdonald இன்று தள்ளுபடி செய்தார்.

ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் George Foulidis, அவருடைய ஓட்டலை 20 வருடங்களுக்கு குத்தகை எடுத்த வகையில் சில சட்டமீறல் நடந்திருப்பதாக டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு 2010 ஆம் ஆண்டில் டொரண்டோ சன் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்ததாக கூறி, இந்த அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் வைக்க தவறியதால், இந்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக இன்று நீதிபதி அதிரடியாக தீர்ப்பு அளித்தார்.

ad

ad