புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012


நாயாத்து வழி பிரதான வீதியிலிருந்து விசேட படகுச் சேவை

மன்னார்-சங்குபிட்டி பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்த நிலையில் அங்கு கடற்படையினர் விசேட படகுச் சேவை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.


நாயாத்து வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் மாந்தை மேற்கு பிரதே செயலாளர் பிரிவுக்குட்பட்ட விடத்தல் தீவு, சன்னார், ஈச்சலவக்கை, பெரியமடு, கோவில் குளம், சவேரியார் புரம், வேன் பிட்டி, வெள்ளாங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்காண போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளது.

இதனால் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் 541ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் கடற்படையினர் படகுகள் மூலம் சுமார் 200 மீற்றர் தூரம் வரை மக்களை ஏற்றி இறக்கும் சேவையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குறித்த பகுதியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் மக்களுக்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



ad

ad