புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2012


வேட்டி கட்டிய தமிழனா? சேலை கட்டிய தமிழரா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்! கலைஞர் பேச்சு!
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி எழுதப்பட்ட ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற புத்தகத்தின் வெளியீடு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 29.12.2012 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். விழாவில் புத்தகத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட, ப.சிதம்பரத்தின் தாய் லட்சுமி ஆச்சி பெற்றுக்கொண்டார். 
விழாவுக்கு தலைமை தாங்கி தி.மு.க. தலைவர் கலைஞ்ர் பேசியதாவது:- 
என் இதயத்தில் இடம்பெற்ற ஒருசிலரில் ஒருவர் ப.சிதம்பரம் ஆவார். 1984-ம் ஆண்டு மத்திய அரசில் துணை அமைச் சரானார். பின்னர், உள்துறை இணை அமைச்சர், வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர், உள் துறை அமைச்சர், 2012-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் நிதி அமைச்சர், அடுத்து என்ன அமைச்சர் என்பதை உங்கள் கையலியே எடுத்துக்காட்டுகிறது. 
வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வேண்டும் என்று முன்னால் பேசியவர்கள் கூறினார்கள். அது வேட்டி கட்டிய தமிழனா? அல்லது சேலை கட்டிய தமிழரா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, முதலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. அதில் பெரும் பங்கு வகித்தவர் சோ, மறைமுக பங்குவகித்தவர் ரஜினிகாந்த். 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2001-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூட்டணியில் மாறுதல் ஏற்பட்டது. குழப்பம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஜி.கே.மூப்பனார், தி.மு.க. கூட்டணியை விட்டு பிரிந்து அ.தி.மு.க., பா.ம.க. வுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். 
இதை அரசியலாக பேசவில்லை. அரசியல் செய்தியை இங்கே சொல்கிறேன். ஆனால், அந்த கூட்டணி ப.சிதம்பரத்திற்கு பிடிக்கவில்லை. அவர் அரசியல்வாதி மட்டுமல்ல. அரசியல் ஞானியாக விளங்கியவர் என்பதற்கு பல கருத்துகள் எடுத்துக்கூறப்பட்டது. இவ்வாறு பேசினார். 

ad

ad