பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் பல முறைப்பாடுகள்
2013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் அது சம்பந்தமான ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்
தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில்
பொன்காந்தன் மற்றும் வேழமாலிகிதன் இன்று திடீர் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப் படாத நிலையில்
இளையராஜா - எம்.எஸ்.வி. தொடங்கிவைக்க சென்னையில் சினிமா தொழிலாளர்கள் ஊர்வலம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் அமீர் சென்னையில் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின்
ஒரே தேசம் ஒரே நாடு எனக்கூறுவோர் திட்டமிட்ட வகையில் எப்படி தமிழர்களின் நிலங்களை அபகரிக்க முடியும் - அரியநேந்திரன்
வலிகாமம் வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களில் உள்ள வீடுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் மிகுந்த அக்கறை காட்டி வருவது இந்நாட்டில் எவ்வாறான ஆட்சி முறை நீடிக்கின்றது என்பதனை சர்வதேசத்திற்கு கோடிட்டுக்காட்டுகின்றது என தமிழ் தேசிய
பா.உ.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இராணுவ புலனாய்வாளர்கள் மிரட்டல்!
காவல்துறை உடை அணிந்த ஒருவர் அடங்கலாக ஒன்பது பேர் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கருகில் இன்று இரவு 10:00 மணியளவில் குவிந்துள்ளனர்.
வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக தமிழ் இன அழிப்பின முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டு பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்ற முயன்றும் வரும் ஒரு உளவியலாளர் குழுவின் சார்பாக பெண்ணிய உளவியலாளரும் அரசியற்செயற்பாட்டாளருமான பரணிகிருஸ்ணரஜனியுடன் நாம் நடத்திய பிரத்தியேக நேர்காணல் இது.
பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவதற்கு அந்தோனி உட்பட 5 அமைச்சர்கள் எதிர்ப்பு
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதற்கு இதுவரை ஐந்து இந்திய மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐதேக.வின் தேசியத்தலைவராக ரணில் நியமனம்! கரு ஜெயசூரிய தலைமையில் தலைமைத்துவக்குழு! சஜித் விலகல
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கு பெறக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பேரணியை ஆரம்பித்து வைத்த அற்புதம்மாள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சூதாட்டத்தில் வென்ற பணத்தை பாலியல் தொழிலாளியிடம் பறிகொடுத்த கொரியப் பிரஜை
கொரியப் பிரஜை ஒருவர், கொழும்பிலுள்ள சூதாட்ட நிலையத்தில் வென்ற 5,10,000 ரூபாய் பணத்தை இலங்கை பாலியல் பெண் தொழிலாளியிடம் பறிகொடுத்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் மத்திய கல்லூரி மாணவ முதல்வர் சபையினால் நடாத்தப்படுகின்ற விபுலானந்தா ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.
இசைப்பிரியா படுகொலை மன்னிக்கமுடியாத குற்றம்! இனியும் இலங்கை மறைக்க முடியாது! அமைச்சர் நாராயணசாமி
இறுதிப்போரில் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை என்று இலங்கை மறைக்க முடியாது. இவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று வலியுறுத்தினார்.
புலிகளுக்கு எதிராக போரில் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பலி
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற போரில் இலங்கை இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவில் பணியாற்றிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.