புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2013

புலிகளுக்கு எதிராக போரில் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பலி
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற போரில் இலங்கை இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவில் பணியாற்றிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த படையினருக்கான நினைவஞ்சலி நிகழ்வு சிங்கப் படைப்பிரிவின் தலைமையகமான அம்பேபுஸ்ஸவில் உள்ள இராணுவ முகாமில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
புலிகளுடனான போர் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த சிங்கப் படைப் பிரிவைச் சேர்ந்த 143 அதிகாரிகள் மற்றும் 3719 படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கிருஷந்த டி. சில்வா, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா , ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், உயிரிழந்த படையினரின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புலிகளுடனான போரில் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த 3862 பேர் போரில் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருக்கலாம் என இராணுவம் தெரிவித்துள்ளது.
1980 ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த்து வரையான காலப்பகுதி வரை - வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளுடனான போரில் முப்படைகள மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த 28,158 பேர் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad