புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2025

www.pungudutivuswiss.com
தலாவவில் கோர விபத்து - 3 பேர் பலி!
[Thursday 2025-09-25 08:00]

குருணாகல்-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர் மேலும் நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆறு பேர் வானில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. வானில் பயணித்த மூவர் உயிரிழந்த நிலையில், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ad

ad