இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேச நேரம் கேட்கிறது தமிழரசு! [Wednesday 2025-09-24 18:00] |
![]() தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்திப்பைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில், எமது கட்சியின் அண்மைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. |
உங்கள் தேர்தல் அறிக்கையில் மற்றும் பல அறிவிப்புகளில் இந்த மிக முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதாக நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். இருப்பினும், கடந்த ஒரு வருடமாக இந்த விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதன்மையான தமிழ் அரசியல் கட்சி என்ற முறையில் மேற்கூறிய பிரச்சினை தொடர்பாக உங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம். இந்த வகையில் உங்களைச் சந்திக்க கீழே கையொப்பமிடப்பட்டுள்ள தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் எங்கள் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட குழு உங்களை விரைவில் சந்திக்க ஒரு நேரத்தை ஒதுக்க தயவுசெய்து நேரம் ஒதுக்குங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. |
-
25 செப்., 2025
www.pungudutivuswiss.com