புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

war-crime434வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, வன்னியில் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி கடந்த காலங்களில் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் அவற்றின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தால் எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள மேற்படி பேரவை சர்வதேச நாடுகளின் இரட்டை போக்கையே இது எடுத்துக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சனல்-4 தொலைக்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள இசைப்பிரியாவின் காணொளியைப் பார்வையிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தவர்களாக உள்ளனர். சிறிலங்காப் படையினர் வன்னியில் எமது மக்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு எத்தகைய சித்திரவதைகளை மேற்கொண்டிருப்பார்கள் என்பது இந்தக் காணொளி ஊடாக தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர். தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக செயற்பட்டவர். அதற்கு அப்பால் அவர் ஒரு சிறந்த கலைஞர். அவர் உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் கொல்லப்படவில்லையென்றும் யுத்தத்திலேயே அவர் இறந்ததாகவும் படைத்தரப்பு இதுவரை கூறி வந்தது. ஆனால், அவர் உயிருடன் பிடிக்கப்பட்டு கடும் சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவு என்பவற்றுக்கு பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

யுத்தத்தில் சண்டையிடுகின்ற தரப்பினருடன் மோதுவதுதான் யுத்த தர்மம். அதேபோன்று எதிரியின் பலத்திற்கேற்ப ஆயுதங்களையே உபயோகிக்க வேண்டும் என்பதும் யுத்த விதி. ஆனால், சிறிலங்கா படையினர் வன்னி யுத்தத்தில் அனைத்து விதிகளையும் மீறி நிராயுதபாணிகளாக நின்ற எமது மக்களை கொன்று குவித்தனர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டுவந்து வன்னியில் கொட்டி எமது மக்களைக் கொலை செய்தனர்.

இது போக எமது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதற்கென்றே தனியான படை அணியொன்று வன்னிக்குள் களமிறக்கப்பட்டிருந்தது. சனல்-4 வெளியிட்டுள்ள இசைப்பிரியாவின் காணொளி மூலமாக இந்த விடயம் தெட்டத் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இசைப்பிரியா கொடுமையான முறையில் வல்லுறவுக்குட்படுத்த பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று சனல்-4 வெளியிட்டுள்ள மற்றொரு காணொளியில் இசைப்பிரியா மேலாடைகள் அற்ற நிலையில் சதுப்பு நிலமொன்றில் இருக்கின்றார். அவரை படையினர் இழுத்து வருகின்றனர். மேலாடை அற்ற நிலையில் அவர் வர மறுத்த போது வெள்ளைத் துணி ஒன்றினால் அவரின் உடம்பை மறைத்து அவரை அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வெறுமனே உள்ளாடை மட்டும் அணிந்த ஒரு நபர் காணப்படுகின்றார். யுத்த களத்தில் படையினன் ஒருவன் வெறுமனே உள்ளாடையுடன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், குறித்த நபர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த களமிறக்கப்பட்ட அணியினனாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. உலகில் யுத்தம் நடைபெறுகின்ற பல நாடுகளில் ஒரு இனத்தை அடக்கியொடுக்குவதற்கு பாலியல் வல்லுறவு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது சிறிலங்காவிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்றுறவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரை உடனடியாகத் தலையிடுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் விசாரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். இதன் மூலமே சர்வதேச நாடுகளின் நேர்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும்.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்

ad

ad