புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

பொன்காந்தன் மற்றும் வேழமாலிகிதன் இன்று திடீர் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப் படாத நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொன்.காந்தன் மற்றும் அ.வேழமாலிகிதன் ஆகியோர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, கெலும் ஒபயசேகர மற்றும் கே.சயந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராயிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களின் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் இவர்கள் உண்மைக்கு புறம்பான வகையில் கைது செய்யப்பட்டமையால் வழக்கிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலையின் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்களிடம் இதுவரை குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்படவில்லை. கைதுக்கான காரணத்தை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
வெடி பொருட்கள், ஆபாச பொருட்களை கைப்பற்றிய முறையில் குழப்பம் ஆகிய காரணங்கள் இவர்களது விடுதலையில் தாக்கம் செலுத்தினாலும் உடல், உள ரீதியாக பொன்.காந்தன் பல சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளான இவர் தொடர்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை கேட்டிருந்த நிலையில் இவர்கள் இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நிரோசா பெனான்டோ முன்னிலையில் விடுதலை செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad